கோபூஜை

கோபூஜை

Read in English


பசுக்கள் பராமரிப்பு

பசுமாட்டினை கோமாதா என்பர். பசு சாதுவான மிருகம் என்பது மட்டுமல்லாமல் தாய்ப்பாலுக்கு ஈடான பாலைத்தந்து குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோரையும் பாதுகாப்பாக வளர்க்கும் தாயாக விளங்குகிறது. இதனால் கோமாதா எனவும் போற்றப்படுகிறது.
கோ என்றாலே தெய்வம் என்று பொருள். முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வசிப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன. எனவே பசுவிற்கு ஒரு கையளவு உணவாக புல் கொடுத்தாலே எல்லா தேவர்களும் மகிழ்ந்து நமது பாவங்களைப் போக்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருவார்கள். இதைத்தான் திருமந்திரம் எனும் பதினோராம் திருமுறை அருளிய திருமூலர் *யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை*
என  மேலான தர்மமாக பசுக்களைப்பராமரித்தல் எனும் கோஸம்ரக்ஷணத்தையும் கோபூஜையின் மகத்துவத்தையும் கூறுகிறார். மேலும் ரகுவம்சம் இயற்றிய மகாகவி காளிதாசர்; திலீபன் எனும் அரசன் வசிஷ்டரின் உபதேசப்படி கோபூஜை செய்ததாலேயே ரகுவைப் புத்திரனாகப் பெற்றும் அவன் வழி தசரதன் ராமன் என வம்சம் தழைத்தது என்றும் கூறுகிறார்.இந்த அடிப்படையில் எல்லோரும் கோபூஜை தர்மத்தில் பங்கு கொண்டு மேலான புண்ணியத்தை அடைய நமது சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் கோசாலை அமைத்து பசுக்களைப் பராமரித்தும் தினமும் கோபூஜை நிகழ்த்தியும் வருகிறோம்.